தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள டெல்லி கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட முதல் மூன்று சம்மன்களுக்கு அவர் ஆஜராகாததற்காக ED உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டதை அவர் தவிர்த்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி டெல்லிநீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் புதன்கிழமை புதிய புகார் ஒன்றை தாக்கல் செய்துள்து
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் சம்மன்களை மதிக்கவில்லை என்பது அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டு
கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ராவின் நீதிமன்றத்தில் நாளை இந்த விவகாரம் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது
டெல்லி கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட சம்மன்களுக்கு அவர் ஆஜராகாததற்காக அவர் மீது அமலாக்கத்துறைக் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது
கலால் கொள்கை தொடர்பாக ஆம் ஆத்மியின் மணீஷ் சிசோடியா மீது வழக்கு நடைபெற்று வருகிறது
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அமலாக்கத் துறை இதுவரை 8 சம்மன்கள் அனுப்பியதற்கு டெல்லி முதலமைச்சர் பதில் ஏதும் அளிக்கவில்லை
இந்த நிலையில், தற்போது சம்மன்களை மதிக்காததற்காக புதிய வழக்கு டெல்லி மாநில முதலமைச்சர் மீது தொடுக்கப்பட்டுள்ளது