மன ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் செயல்திறன் ஆகியவற்றை அதிகரிப்பதில் பழங்களின் பங்கு அதிகம்
பழங்களில் இயற்கையாகவே இருக்கும் ஊட்டச்சத்துக்கள், உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது
தினமும் பழங்களை சாப்பிட்டு வந்தால், நோயில்லா வாழ்வை அனுபவிக்கலாம்
பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உடல் அமைப்புகளின் பராமரிப்பிற்கும் இன்றியமையாதது
நாள்பட்ட நோய்களின் அபாயத்தை பழங்களை உட்கொள்வதால் கிடைக்கிறது
பக்கவாதம், இருதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்தை குறைக்க பழங்கள் நிறைந்த உணவு அவசியம் ஆகும்
சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும் பொட்டாசியம் சத்து பழங்களில் இருந்து கிடைக்கும்
உடலில் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவும் ஃபோலிக் அமிலம், தரமாக கிடைப்பது பழங்களில் இருந்து தான்
செல் சேதத்தைத் தடுக்க தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்களை பழங்கள் நுகர்வு கொடுக்கிறது
ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை சரிசெய்ய உதவும் பழங்கள், சிலவகை புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
பாலிபினால்கள் போன்ற குடல் நுண்ணுயிரிகளை பாதுகாக்க இயற்கையான சத்துக்களை அப்படியே தேவை. அதற்கு பழங்களை விட சிறந்த தேர்வு கிடையாது