நமது உடலில் சேரும் கழிவுப்பொருட்கள் மற்றும் அழுக்குகளை வடிகட்டும் வேலையை சிறுநீரகம் செய்கிறது
சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது பல்வேறு நோய்களுக்கு காரணமாகிறது. எனவே, சரியாக செயல்படாத போது உடலின் சில பாகங்களில் வலி ஏற்படும்.
சிறுநீரக செயலிழப்பு காரணமாக முதுகுவலி உணரப்படலாம். சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படாமல், கழிவுப் பொருட்களை அகற்ற முடியாமல் போனால், முதுகுவலியை உண்டாகிறது. எழுந்திருக்கும்போது அல்லது உட்கார்ந்திருக்கும்போது கடுமையான வலி இருந்தாலும், அது நீண்ட காலமாக தொடர்ந்தாலும், மருத்துவரை அணுக வேண்டும்.
சிறுநீரக செயலிழப்பு இருந்தால், விலா எலும்புகளில் வலி ஏற்படலாம். இந்த அறிகுறியை புறக்கணிக்கக்கூடாது.மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு மாதாந்திர மாதவிடாய் காரணமாகவும் வயிறு மற்றும் விலாவில் வலி ஏற்படுவதை சிறுநீரக கோளாறுக்கான வலியுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்
பாதங்கள் மற்றும் கணுக்கால் வலி சிறுநீரக கோளாறுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, உப்பு உடலில் சேர்ந்து, பாதங்கள் மற்றும் கணுக்கால்கள் வீங்கத் தொடங்குவதால் வலி ஏற்படும்
சிறுநீரக செயலிழப்பு காரணமாகவும் நெஞ்சு வலி ஏற்படலாம். சிறுநீரகம் சரியாக செயல்படாவிட்டால், இதயத்தின் பெரிகார்டியம் வீக்கமடைகிறது. இதனால் நெஞ்சு வலி ஏற்படுகிறது. நெஞ்சுவலிக்கான காரணம் எதுவாக இருந்தாலும், வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
உண்ணும் உணவும், பழக்கவழக்கங்கள் சீராக இருந்தாலும் சிறுநீரகமும் சீராக இயங்கும்
இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை