வைட்டமின் பி12 குறைபாடு...இவைதான் அபாய அறிகுறிகள்!! உஷார் மக்களே!!

Sripriya Sambathkumar
Nov 22,2023
';

வைட்டமின் பி12

வைட்டமின் பி12 சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் டிஎன்ஏவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.

';

குறைபாடு

இந்தியாவில் 70 சதவீதம் பேர் வைட்டமின் பி 12 குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

';

அறிகுறிகள்

வைட்டமின் பி 12 குறைபாட்டை எடுத்துக்காட்டும் சில அறிகுறிகளும் உள்ளன. அவற்றை பற்றி தெரிந்துகொண்டு அவை தோன்றினால் உடனடியான மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.

';

சோர்வான உணர்வு

ஒருவர் அடிக்கடி சோர்வாகவும் (Fatigue) பலவீனமாகவும் உணர்ந்தால், அவரது உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கலாம். வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக, ஆக்ஸிஜன் வழங்கல் குறையத் தொடங்குகிறது.

';

மறதி

நினைவாற்றல் பலவீனமடையத் தொடங்கினால் அல்லது எதையும் நினைவில் வைத்துக் கொள்ள உங்கள் மூளைக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தால், உங்கள் உடலில் பி 12 இன் குறைபாடு இருக்கலாம்.

';

நரம்புகளின் விறைப்பு

பி 12 இன் குறைபாடு காரணமாக, நரம்புகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. நரம்புகள் பலவீனமடையத் தொடங்கும் போது, ​​கைகள் மற்றும் கால்களில் தொடர்ந்து கூச்ச உணர்வு ஏற்படுகிறது, உணர்வு குறையத் தொடங்குகிறது.

';

மோசமான பார்வை

வைட்டமின் பி 12 குறைபாட்டால், கண் பார்வை மங்கலாகத் தொடங்கும். மேலும் உங்கள் பார்வையும் குறையத் தொடங்கும்.

';

வாய் புண்கள்

வாயில் கொப்புளங்கள் தோன்ற ஆரம்பித்தால், இதுவும் வைட்டமின் பி12 குறைபாட்டின் முக்கிய அறிகுறியாகும்.

';

VIEW ALL

Read Next Story