நமது ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் சில அறிகுறிகள் மூலம் நாம் அதை கண்டறியலாம்.
மூட்டுகளில், கை, கால் விரல்களில் வலி ஏற்படுவது யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளாகும்.
அடிக்கடி சிறுநீரக கல் பிரச்சனை ஏற்பட்டால், உடலில் யூரிக் அமில அளவை பரிசோதிப்பது நல்லது.
வயிற்றில் அதிக வாயு உருவாவதும், அசிடிட்டி பிரச்சனை இருப்பதும் அதிக யூரிக் அமிலத்திற்காக அறிகுறிகளாகும்.
சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வந்தால் உடனடியாக யூரிக் அமில சோதனை செய்துகொள்வது நல்லது.
மூட்டுகளில் உராய்வு சத்தம் வந்தால் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது என அர்த்தம். இதற்கு, உடனடி பரிசோதனை மற்றும் சிகிச்சை அவசியம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை