உணவில் சர்க்கரையை கண்டிப்பாக குறைக்க வேண்டும். முற்றிலுமாக நீக்கினால் சிறப்பு. இனிப்பு உடல் பருமனுக்கு முதல் எதிரி.
பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு பதிலாக ஆரோக்கியமான தானியங்கள் மற்றும் காய்கறிகளுடன் நாளை தொடங்க வேண்டும்
ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த நட்ஸ், ஆலிவ் ஆயில் மீன் உணவுகள் ஆகியவை டயட்டில் இருக்க வேண்டும்
உடற்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும். அவ்வப்போது செய்வதால் பலன் இருக்காது.
உடல் எடை குறைய அத்தியாவசியமான மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்க, உணவில் புரதம் நிறைந்த உணவுகள் அவசியம்.
மன அழுத்தம் உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணங்களில் ஒன்று. யோகா தியானம் ஆகியவற்றை கடைபிடிப்பது பலன் தரும்.
உடல் பருமனை குறைக்க வேண்டும் என்றால் மதுப்பழக்கத்தை நிச்சயம் கைவிட வேண்டும்.
உடல் பருமன் குறைய ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம். இரவில் ஏழு முதல் ஒன்பது மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் பெற முயற்சிக்கவும்.
நிறைய தண்ணீர் அருந்துவது மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடை குறைய உதவும்.
உடல் பருமன் அல்லது தொப்பை கொழுப்பு என்பது படிப்படியாகவே குறையும். உடனடி பலனை எதிர்பார்க்க முடியாது. இரண்டு மாதங்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் பலன்களை கண்கூடாக பார்க்கலாம்.