இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, ரத்தத்தில் அதிக கொலஸ்டிரால் என்பது அநேகருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாகவே உள்ளது. அதிக கொலஸ்டிரால், இதய நோய் உள்ள பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
உடலில் LDL என்னும் கெட்ட கொலஸ்டிரால் அதிகமாகி, HDL என்னும் நல்ல கொலஸ்டிரால் அளவு குறைந்து கொண்டே போகும் போது, மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றன.
பூண்டை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பை தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
மஞ்சள் கலந்த பாலைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொலஸ்ட்ரால் எளிதில் கரைந்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
பச்சை நிற காய்கறிகளில் இரும்புச் சத்து நிறைந்திருக்கும். இது இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, தமனிகள் ஏற்படும் அடைப்பில் இருந்து காக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து மாரடைப்பு அபாயத்தை குறைக்க ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் சிறந்தவை என்கின்றனர் நிபுணர்கள்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.