மருத்துவ குணங்கள், தனித்துவமான சுவை காரணமாக கருப்பு தங்கம் என அழைக்கப்படும் குருமிளகு சளி மற்றும் இருமல் தொடர்பான நோய்களை குணப்படுத்துவதுடன் உடலுக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது
மிளகு உடலில் நச்சுத்தன்மையை நீக்குகிறது. உடலில் டி.என்.ஏ சேதத்தை குறைக்கிறது.
மிளகு புற்றுநோயைத் தடுக்க உதவும். இதிலுள்ள முக்கிய ஆல்கலாய்டு பைபரின், பல்வேறு புற்றுநோய்களில் ஆன்டி-டூமர் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது
உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் குருமிளகு, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
குருமிளகின் மிகச் சிறந்த பண்பு அது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் மலச்சிக்கலைத் தடுப்பதும் ஆகும்.
குருமிளகில் உள்ள பைபரின் காரணமாக உடல் எடை குறையும், இது புதிய கொழுப்பு செல்கள் உருவாவதைத் தடுத்து, உடல் பருமனைத் தடுக்க உதவுகிறது
மூளைக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால், மூளை சுறுசுறுப்பாக இருக்கும், மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.