ஆரோக்கியமான முறையில் ஒரே வாரத்தில் 7 கிலோ எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
எடை இழப்பு உணவில் பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை தவிர்க்க வேண்டும்.
அதிக தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். மேலும், நீங்கள் அருந்துவது வெந்நீர் என்றால், அது கூடுதல் பலனைக் கொடுக்கும். வெந்நீர் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.
உடல் எடையை இழக்க உணவு விஷயத்திதை போலவே வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியம். தினமும், குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
தூக்கமின்மை உங்கள் உடலில் அதிக கிரெலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது பசியை தூண்டி பருமனை ஏற்படுத்தும். தினமும் இரவு 7-8 மணி நேரம் தூங்குவது அவசியம்.
நீங்கள் ஒரு வாரத்தில் எடை இழக்க விரும்பினால், மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியம். அதற்காக யோகா, தியானம் போன்றவற்றை கடைபிடிக்கலாம்.
ஆரோக்கியமான முறையில் ஒரு வாரத்தில் 7 கிலோ கிராம் குறைக்க முடியும். ஆனால் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். எனவே ஒருவருக்கு ஏற்றதாக இருக்கும் விஷயம் மற்றொருவருக்கு பொருந்தாது.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.