மெட்டபாலிஸம் என்னும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகளையும் பழக்கங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இஞ்சி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனை தினமும் உட்கொள்வதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வராது.
பொட்டாசியம் மற்றும் பி வைட்டமின்கள் பச்சைக் காய்கறிகளில் அதிகம் காணப்படுவதால், வளர்சிதை மாற்றம் வலுவடைகிறது. மேலும், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பி வைட்டமின்கள் பச்சைக் காய்கறிகளில் காணப்படுகின்றன.
கிரீன் டீயின் மருத்துவ குணங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டி அதிக கலோரிகளை எரிக்க உதவும்.
வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்க முக்கியமாக தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும். இதனால் உடலில் நச்சுக்களும் வெளியேறும்.
உலர் பழங்கள், வெண்ணைப்பழம், மீன் உணவுகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்க்கவும்
லிஃப்ட் பயன்படுத்தாமல் படிகளை பயன்படுத்துவது, முடிந்த அளவு நடப்பது, வீட்டு வேலைகளை செய்வது, உடல் பயிற்சி ஆகியவை மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும்.
ஆழ்ந்த 7 -8 மணி நேர தூக்கம் நல்ல வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் அவசியம். தூக்கமின்மை வளர்சிதை மாற்றத்தை பெரிதும் பாதிக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.