அதிகரிக்கும் உடல் எடையைக் குறைக்க நம்மில் பலர் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறோம். சிலர் ஜிம் செல்கிறோம். ஆனால், சிலரால் அது முடிவதில்லை.
ஜிம் செல்லாமலேயே உடல் எடையை குறைக்கும் வழிகளை இங்கே காணலாம்.
உடல் எடையை குறைக்க உணவு முறையிலும் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய வேண்டியது மிக அவசியமாகும்.
உடல் எடையை குறைக்க வேண்டுமானால் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை நிறுத்த வேண்டும்.
தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதை கண்டிப்பாக வழக்கமாகக் கொண்டால் உடல் எடையை குறைக்கலாம்.
வீட்டில் இருக்கும் போது ஸ்க்ப்பிங் செய்வதும் உடல் எடையை குறைக்க ஒரு நல்ல வழியாகும்.
ஜிம் போக முடியாதவர்கள் அல்லது பிடிக்காதாவர்களுக்கு யோகா ஒரு நல்ல மாற்றாக அமையும்.
வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வதாலும் நமது உடல் கட்டுக்கோப்புடன் இருக்கும். உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகமாகும்.
இரவில் சரியான நேரத்துக்கு தூங்க வேண்டும். போதுமான தூக்கம் இல்லாததாலும் உடல் எடை அதிகரிக்கும்.