பப்பாளி எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்பது மாற்றுக் கருத்து ஏதுமில்லை.
ஆனால், அளவிற்கு மிஞ்சிய பப்பாளி உடல் நலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
பப்பாளியில் உள்ள லேட்டஸ்ட் என்னு கலவை ரத்தத்தை மெலிதாக்கும் தன்மை கொண்டவை. எனவே ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதிக பப்பாளி இதயத் துடிப்பை குறைக்கும் என்பதால் நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பப்பாளியில் உள்ள பப்பேன் என்னும் கலவை அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்படும் போது உணவு குழாயில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அளவிற்கு அதிக பப்பாளியினால், சிறுநீரகத்தில் கல் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பப்பாளி, அதிலும் பழுக்காத பப்பாளி என்றால் அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் கருக்கலைப்பு ஏற்படலாம்.
பப்பாளியில் பீட்டா கேரோட்டின் அதிகம் இருப்பதால், சருமத்தில் மஞ்சள் அல்லது இளம் சிவப்பு திட்டுகள் ஏற்படலாம்.
பப்பாளியில் உள்ள என்சைங்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது அலர்ஜி பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அளவிற்கு அதிகமான பப்பாளியை சாப்பிடுவது வாந்தி வயிற்றுப்போக்கை அதிகரிக்கலாம்.
பப்பாளியில் பப்பையின் என்னும் என்சைங்கள் நிறைந்துள்ளதால் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.