வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஊட்டச்சத்துகளைக் கொண்டது வால்நட்...
வால்நட்டில் என்ன சத்து இல்லை என்று கேட்கு அளவுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன
உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க உதவும்வைட்டமின் ஈ சத்து அக்ரூட்டில் உள்ளது. இதயத்திற்கு பாதுகாப்பை வழங்கும் இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
உடலுக்கு ஆற்றல் கொடுக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் மாங்கனீசு உதவுகிறது.
எலும்பு வளர்ச்சிக்கு தேவையான தாமிரம் அக்ரூட் பருப்பில் நிறைந்துள்ளது
வால்நட்களில் நிறைந்துள்ள பொட்டாசியம் ஊட்டச்சத்து, தசை சுருக்கம் மற்றும் நரம்பு செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உங்கள் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கவும் பொட்டாசியம் உதவுகிறது.
தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு அவசியமான செலினியம் அக்ரூட் பருப்புகளில் உள்ளது. இது சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதோடு புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் செலினியம் அவசியமானதாகும்
டிஎன்ஏ தொகுப்பு மற்றும் செல் பிரிவுக்கு தேவையான ஃபோலேட் சத்து அக்ரூட் பருப்புகளில் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஃபோலேட் சத்து, ஸ்பைனா பிஃபிடா போன்ற பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.
இயற்கையான ஹார்மோன்களாக செயல்படும் தாவர கலவை லிக்னான் அக்ரூட்டில் அதிகம் உள்ளது. மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் லிக்னான்கள் உதவுகின்றன
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை