பல்வேறு புரதங்களின் தொகுப்புக்கு உதவும் ஊட்டச்சத்துகளில் முக்கியமானது வைட்டமின் கே. இந்த வைட்டமின் உடலில் குறைந்தால் உடல்நலம் கெடும்
பற்கள் மற்றும் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டால், அது வைட்டமின் கே குறைபாடாக இருக்கலாம் என்று புரிந்துக் கொள்ளலாம்
சிறு காயம் ஏற்பட்டாலும், ரத்தம் தொடர்ந்து வரும். வைட்டமின் கே ஊட்டச்சத்து, ரத்த உறைதலுக்கு முக்கியமானதாகும். அதன் குறைப்பாடு, நிற்காமல் ரத்தம் உடலில் இருந்து வெளியேற காரணமாகிவிடும்
இரத்தப்போக்கு கோளாறு நோய்க்கு ஹீமோபிலியா என்று பெயர். இது ஒரு மரபணு நோயாகும், இந்த நோய் பாதித்தால் வைட்டமின் கே குறைபாடு ஏற்படும்.
உடலின் தேவைக்கு ஏற்றவாறு வைட்டமின் கே கிடைக்காவிட்டால், உடலின் இயக்கம் குறைந்துவிடும். நாள்தோறும் ஆண்களுக்கு 120mcg மற்றும் பெண்களுக்கு 90mcg வைட்டமின் கே தேவைப்படுகிறது
வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால், எலும்பின் அடர்த்தி குறைந்து மூட்டுகள் மற்றும் எலும்புகளில் வலி ஏற்படும்
வைட்டமின் கே உடலின் தேவைக்கு ஏற்றவாறு கிடைக்காவிட்டால், மூளை வேலை செய்வது மந்தமாகிவிடும்.
உடலுக்கு வைட்டமின் கே உணவில் இருந்து கிடைக்கிறது. அதேபோல, நமது குடல் தானாக இந்த வைட்டமினை உற்பத்தி செய்கிறது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை