புத்தாண்டில் சிலிண்டர் விலை 800 ரூபாயாக குறையுமா? புத்தாண்டு எதிர்பார்ப்பு!

Malathi Tamilselvan
Dec 27,2023
';

சிலிண்டர் விலை

இன்னும் சில நாட்களில் 2024ம் ஆண்டு வரவிருக்கும் நிலையில், புத்தாண்டில் முன்னிட்டு சிலிண்டரின் விலை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

';

எல்பிஜி விலை

சர்வதேச சந்தை விலையை சார்ந்தே உள்நாட்டில் எல்பிஜி விலை நிர்ணயிக்கப்படுகிறது. இன்று சென்னையில் மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டர்களின் விலை ₹ 918.50 ஆகும்

';

சர்வதேச சந்தை

ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்றாற்போல எல்பிஜி விலையை இந்திய அரசு திருத்தி அமைக்கிறது

';

எல்பிஜி பயன்பாடு

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டரின் தேவையும் பயன்பாடும் அதிகரித்துள்ளது

';

மக்களவைத் தேர்தல்

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு அரசு சிலிண்டர் விலையை குறைக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன

';

விலைக் குறைப்பு

சுமார் 100 ரூபாய் வரை சிலிண்டர் விலை குறைக்கப்படலாம் என்றும், எனவே மானியம் இல்லா LPG சிலிண்டர் விலை 800 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது

';

எரிபொருள்

வீட்டு உபயோக சிலிண்டர் விலைக் குறைப்பைப் போலவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை 4 முதல் 5 ரூபாய் வரை குறைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்றும் நம்பப்படுகிறது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story