இந்தியாவில் அதிகமாக பரவுவதாக தகவல்கள் வந்திருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்
ஒருவரிடமிருந்து மற்றவருக்கு காற்றின் மூலம் பரவும் வைரஸ், கோடைக்காலத்தில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது
பெரும்பாலும், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும்தான் சின்னம்மை வருகிறது
சின்னம்மை வந்தவர்களுக்கு 5 முதல் 10 நாட்கள் வரை உடலில் இருக்கும். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இருமல், சளி, உமிழ்நீர், தும்மல் வழியாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
சிக்கன் பாக்ஸ் பாதித்தவர்களுக்கு ஏற்பட்ட புண்களை இன்னொருவர் தொடுவதன் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படும்
உடலுக்குள் புகுந்த மூன்று வாரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தத்தில் வைரஸ் கலந்த பிறகு பாதிப்பு வெளியில் தெரியும்
102 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலான காய்ச்சல் ஏற்படலாம். இந்த காய்ச்சலால் தொண்டை, நுரையீரல் மற்றும் சருமத்தில் புண்கள் ஏற்படும்
மருத்து வரை அணுகி ஆன்டிவைரல் மருந்துகளைச் சாப்பிட்டால், அம்மை நோயின் தீவிரம் குறையும்