சித்தர்கள் பயன்படுத்திய மருத்துவ குணம் மிக்க உப்பு படிமம் தான் படிகாரம். படிகாரம் என்பது அலுமினியத்தின் நீர்ரேற்றிய இரட்டை சல்பைட் உப்பு.
படிகார நீரில் கழுவினால் முடியின் வேரில் இருந்து சுத்தமாகும். தூசி மற்றும் அழுக்கு வெளியேறும். இது பேன்களையும் கொல்லும்.
தினமும் குளித்தவுடன் படிகாரம் கற்களை உடம்பில் தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படும் கெட்ட வியர்வை துர்நாற்றம் நீங்கி விடும்.
படிகாரப் பொடியை நீர் விட்டு நன்கு குழைத்து கண்களுக்குள்ளாக படாமல், கருவளையங்கள் மீது தடவி வருவதால் கருவளையங்கள் நீங்கும்.
தினமும் இரவு தூங்குவதற்கு முன் படிகாரம் கற்களை எடுத்து குதிகால் வெடிப்பு உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து வர வெடிப்புகள் மறைந்து விடும்.
படிகாரம் கலந்த நீரில் வாய் கொப்பளிக்க தொண்டை புண் குணமாகும்.
படிகாரம் முகத்திற்கு இயற்கையான கிளென்சிங் பொருளாக செயல்படுகிறது. இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும்.
சிறுநீர் தொற்று நீங்க, அந்தரங்கப் பகுதியை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட படிகாரம் கலந்த நீரில் கழுவலாம்.