நமது சமையலில் பயன்படுத்தப்படும் பல மசாலாக்கள் சுவையை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் கருஞ்சீரகம் ஒரு மிக அற்புதமான மசாலா பொருளாகும்.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கருஞ்சீரகம் ஆயுர்வேத மருத்துவத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது
பல வித வைட்டமின்கள், உணவு நார்ச்சத்து ஆகியவை உள்ள கருஞ்சீரகம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றது
இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகின்றன
உணவு நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ள கருஞ்சீரம் உடல் எடையை குறைக்க உதவும்.
கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நமது உடலில் உள்ள கேடு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்ளை செயலிழக்க செய்வதில் வல்லமை படைத்தவை