சியா விதைகள் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
சியா விதைகளில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சியா விதைகள் உணவு நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இது மலச்சிக்கலைத் தடுப்பதன் மூலம் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
சியா விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து உள்ளதால் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
சியா விதையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் மற்றும் மக்னீசியம் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவும்.
சியா விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்துகளின் பங்கு அதிகமாகும். வயது முதிர்வை கட்டுப்படுத்தும்.
சியா விதைகளில் உள்ள மருத்துவ பண்புகள், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.