உலக அளவில் நீரிழிவு நோய் நாளுக்கு நாள் அதிக மக்களை ஆட்கொண்டு வருகின்றது.
திடீரென அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை சட்டென குறைக்கும் சில உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
சூப்பர் ஃபுட் என அழைக்கபடும் ப்ரோக்கோலி இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
வெள்ளை அரிசி, கோதுமை ஆகியவற்றுக்கு பதிலாக நீரிழிவு நோயாளிகள் முழு தானியங்களை உட்கொள்ள வேண்டும்
காலை உணவில் ஒரு முட்டையாவது உட்கொள்ள வேண்டும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்துள்ள பருப்பு வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான ஊட்டசத்தை வழங்குகின்றன.
கொய்யாவில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.