உலகெங்கிலும் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த குறைந்த ஜிஐ (Low Glycemic Index) உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உணவில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கேரட்டில் (Carrot) உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி குளூகோசை கட்டுப்படுத்த உதவுகிறது.
அதிக ஊட்டச்சத்து உள்ள கீரை மேன்மையான இரத்த ஓட்டத்தை ஏதுவாக்கி இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) கட்டுக்குள் வைக்கிறது.
இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ப்ரீபயாடிக் ஆகும்.
திடீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பச்சை மற்றும் சிவப்பு குடைமிளகாய் (Capsicum) உதவும்.
வைட்டமின் சி அதிகமாக உள்ள முட்டைகோஸ் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
பச்சை பீன்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அனைத்து வைட்டமின்களும் இதில் உள்ளன.