புளித்த மாவில் செய்யப்படும் இட்லி ஆவியில் வேகவைக்கப்படுகிறது. கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் உற்சாகத்துடன் நாளை தொடங்க உதவும்
சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கோதுமை ரவை உப்புமா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
உங்கள் நாளைத் தொடங்கஆரோக்கியமான வழி முளை கட்டிய தானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்வது. புரதம், நார்ச்சத்துக்கான நல்ல மூலமான இவற்றில் புரதம், ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, வைட்டமின்கள் சி மற்றும் கே நிரம்பியுள்ளன
இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த ராகியில் செய்யப்படும் தோசை உங்களின் சிறந்த காலை உணவாக இருக்கும்
கிச்சடிகளை காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து உண்பது, மிகவும் ஆரோக்கியமான காலை உணவாக இருக்கும்
ரவையில் இருந்து தயாரிக்கப்படும் உப்புமாவில், இஞ்சி மற்றும் காய்கறிகள் சேர்த்து சமைப்பதால், இது உடலுக்கு போதுமான நல்ல கார்போஹைட்ரேட்டை வழங்குகிறது
தென்னிந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள தோசை, உடல் எடை குறைப்புக்கான சிறந்த காலை உணவாக இருக்கும்
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை