டீயுடன் பிஸ்கட் மற்றும் சிற்றுண்டி சாப்பிடும் வழக்க பலருக்கு உள்ளது.
ஆனால், டீயுடன் சில உணவுகளை எடுத்துக் கொள்வது உடல நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர்.
டீயுடன் கேக் போன்ற பேஸ்ட்ரி வகை உணவுகளை எடுத்துக் கொள்வதால், சுகர் லெவல் மிகவும் அதிகாரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தேநீருடன் எலுமிச்சை கலந்த உணவுகளை சாப்பிடுவதும் சரியல்ல. இது ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
கீரை சாப்பிட்டவுடன் டீ குடித்தால், அதில் உள்ள இரும்பு சத்து உடலில் சேராமல் போய் விடும். இதனால் இரத்த சோகை ஏற்படலாம்.
டீயில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் உள்ள புரதத்துடன் கலக்கும் போது மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் அபாயம் அதிகரிக்கும்.
டீயுடன் பகோடா பஜ்ஜி சாப்பிடுவது நல்லதல்ல. கடலை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை டீயுடன் உட்கொண்டால், குடல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
உலர் பழங்களையும் தேநீருடன் உட்கொள்ளக் கூடாது. உலர் பழங்களில் காணப்படும் இரும்பு சத்துக்கள், இரசாயன எதிர்வினையை ஏற்படுத்தி நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.