இந்தியாவில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 80 சதவீதம் பேர் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கின்றனர் என தரவுகள் கூறுகின்றன.
உணவுப்பழக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட பல வாழ்க்கை முறை பழக்கங்களின் விளைவாக பலருக்கு தூக்கமின்மை பிரச்சனை உள்ளது
கெமோமில் டீயில் உள்ள அபிஜெனின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் மூளையில் தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மையை தூண்டி நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.
இரவில் நன்றாக தூங்க பாலாசனம், சவாசனம், சேது பந்தாசனம், சுப்த பத்த கோனாசனம் ஆகியவற்றை முயற்சி செய்யலாம்.
உங்கள் உடலும் மனமும் நிம்மதியாக உணர இருண்ட, சத்தம் இல்லாத அறை தேவை. இருள் தூக்கத்தை ஊக்குவிக்கும் மெலடோனின் என்ற ஹார்மோனைது தூண்டுகிறது
நல்ல சிலிக்கானில் செய்யப்பட்ட ஒரு ஸ்லீப்பிங் ஐ மாஸ்க், கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்து தூக்கத்தை கொடுக்கும். உங்கள் மனதையும் நிம்மதியாக உணர வைக்கும்.
வெறும் 10 நிமிடங்களில் தூங்க, மெல்லிய இசையை இசைக்கவும், ஒலியளவைக் குறைவாக வைத்திருக்கவும். இதை ஒரு தாலாட்டுப் பாடலாக இருந்தால் பலன் நிச்சயம்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.