எக்ஸ் செயலியில் விரைவில் பண பரிமாற்றம்..!
எக்ஸ் செயலியில் விரைவில் பண பரிமாற்றம் செய்யலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்தாண்டு மிகப்பெரிய தொகைக்கு வாங்கினார்.
இதனைத் தொடர்ந்து ட்விட்டர் பெயர் ‘எக்ஸ்’ என மாற்றம் செய்யப்பட்டது. ட்விட்டரின் அடையாளமாக திகழ்ந்த நீல நிற பறவை நீக்கப்பட்டது.
தொடர்ந்து பணம் செலுத்தினால் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு அளிக்கப்படும் ப்ளூ டிக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் இவர்கள் மட்டுமே 10,000 எழுத்துகள் வரை ட்வீட் செய்யலாம் என பல வசதிகளை அறிமுகம் செய்தார்.
மேலும் அரசு பிரதிநிதிகள், அரசாங்கம் தொடர்பான கணக்குகளுக்கு தனித்தனியாக நிறங்களில் அதிகாரப்பூர்வ கணக்கு வழங்கப்பட்டது.
அதேசமயம் எக்ஸ் செயலியில் உணவுகளை ஆர்டர் செய்தல், பணம் அனுப்பும் வகையில் மாற்றம் கொண்டுவர உள்ளார் மஸ்க்
அதேசமயம் பிற சமூக வலைத்தளங்களில் இருக்கும் ப்ளாக் செய்யும் வசதி விரைவில் நீக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்