எல்லா குழந்தைகளுக்கும் ஒரே அளவிலான ஐக்யூ இருப்பதில்லை. ஆனால் ஒரு குழந்தை வளரும் போது சில பயற்சிகள் வழங்கினால் அவர்களின் ஐக்யூ நாளடைவில் அதிகரிக்கலாம்.. குழந்தை அனைத்திலும் சிறப்பாக விளங்க மூளைக்கான சில பயிற்சிகளையும், பழக்கங்களையும் உணவுகளையும் அறிந்து கொள்ளலாம்
மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்க மூளைக்கான உணவுகள் கொடுப்பது மிக முக்கியம்
மூளையை உபயோகித்து விளையாடப்படும் விளையாட்டுகளை தினமும் 10 நிமிடங்கள் விளையாட ஒதுக்க பழக்குங்கள். புதிர்களை தீர்ப்பதும் புது விஷயங்களை எப்படி கையாளும் திறன் அதிகரிக்கும்.
விளையாட்டு இயல்பாகவே மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இது உடலில் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. பிடித்த ஒரு விளையாட்டை தினமும் விளையாடுவது ஐக்யூவை அதிகரிக்க செய்யும்.
கணக்கு பயிற்சிகளை இளமையில் கற்க செய்வது, அவர்களின் மூளையின் வேகத்தை அதிகப்படுத்தும்.
இசை கருவிகள் கற்கும் போது மூளை முழுவதுமாக செயல்படும். குழந்தைகள் ஒரு இசைக்கருவியைக் கற்றுக்கொள்ளச் செய்யும் போது, நுணுக்கங்கள் பற்றிய புரிதல் வரும். அதனால் அவர்களது மூளை எந்த விஷயத்தையும் பகுத்தறிய முற்ப்படும்.
குழந்தைகள் 10 நிமிடங்கள் தியானம் செய்யும் போது, மூளை செயல் திறன் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தியானம், மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ள பழக்கப்படுத்துங்கள்.
குழந்தைகள் மூளை நன்றாக வளர அவர்கள் நல்ல தூக்கம் தேவை