வைட்டமின் பி12 உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு தேவையான ஒன்றாக உள்ளது.
உடலில் வைட்டமின் பி12 குறைந்தால் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
வைட்டமின் பி12 உடலில் குறைந்தால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வைட்டமின் பி12 உடலில் குறைந்தால் முதலில் சோர்வு மற்றும் உடல் பலவீனமாக காணப்படும்.
மேலும் கை மற்றும் கால்களில் உணர்வின்மை இருந்தால் வைட்டமின் பி12 குறைபாடாக இருக்கலாம்.
உடலில் வைட்டமின் பி12 குறைந்தால் வாயில் புண்கள் ஏற்படும். இதன் காரணமாக எந்த ஒரு உணவை சாப்பிட முடியாது.
உடலில் வைட்டமின் பி12 குறையாமல் இருக்க முட்டை, சிக்கன் மற்றும் பால் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.