அடிக்கடி மயக்கம் அடைந்தால், மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு இருக்கலாம்.
எதிலும் கவனம் செலுத்த முடியாமல் கவனச் சிதறல் அதிக அளவில் இருந்தால், மூளை நரம்பில் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியாகும்.
அடிக்கடி வாந்தி பிரச்சனை ஏற்பட்டால், அது ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
அடிக்கடி காரணம் இல்லாமல் கடுமையான தலைவலி ஏற்பட்டால், அது மூளை நரம்பு அடைப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
விவரிக்க முடியாத வகையில், பார்வைத் திறனில் பாதிப்பு ஏற்பட்டால், அது நரம்பில் ஏற்பட்டுள்ள அடைப்பின் எச்சரிக்கை அறிகுறி ஆகும்
தனது மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில், சிரமங்களை சந்தித்தால், அது நரம்பு பாதிப்பின் எச்சரிக்கை அறிகுறியாகும்.
கோர்வையாக பேச முடியாமல் , பேசுவதில் சிக்கல் இருந்தால், அது மூளை நரம்பு பாதிப்பின் எச்சரிக்கையாக இருக்கலாம்.
உடலில் ஏதோ ஒரு பகுதியில் உணர்வின்மை இருந்தால் மூளை நரம்புகளில் அடைப்பு இருப்பதற்கான அறிகுறியாகும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.