இந்த ஐபிஎல் சீசனில் பவர்பிளேவில் கெத்துகாட்டும் சன்ரைசர்ஸ்
சன்ரைசர்ஸ் அணி கடந்த 2 ஐபிஎல் தொடர்களை ஒப்பிடும்போது இந்த ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் களம் கண்டுள்ளது சன்ரைசர்ஸ்
அவருக்கு முன்பாக தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்கிரம் கேப்டனாக இருந்தார். அவர் இந்த தொடரில் ஒரு பிளேயராக மட்டும் ஆடுகிறார்.
பாட் கம்மின்ஸ் தலைமையில் சன்ரைசர்ஸ் அணி 4 போட்டிகளில் ஆடி 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது.
அந்த அணி கடந்த இரு ஐபிஎல் சீசன்களில் பவர்பிளேவில் ஆடியதை விட இந்த முறை மிகச்சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தங்களின் மோசமான சாதனையை இந்த ஆண்டு முறியடித்திருக்கிறது.
அதாவது, 2022ல் பவர்பிளேவில் 14 போட்டிகளில் 14 சிக்சர்கள் மட்டுமே அடித்தது. 2023ல் 14 போட்டிகளில் 12 சிக்சர்கள் மட்டுமே அடித்திருந்தது.
ஆனால் இந்த ஐபிஎல் போட்டியில் ஐந்தே போட்டிகளில் 15 சிக்சர்கள் அடித்து கடந்த 2 மோசமான சீசன்களில் படைத்த அந்த சாதனையை முறியடித்திருக்கிறது.