உலக அளவில் நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது
நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் கட்டுப்படுத்த மட்டுமே முடியும்
இதன் அறிகுறிகளை கண்டிப்பாக நாம் புறக்கணிக்க கூடாது. நாம் கவனமாக இருக்க வேண்டிய சில முக்கிய அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்
உணவு உட்கொண்ட பிறகு அளவுக்கு அதிகமாக தாகம் எடுத்தால் அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். எடை அதிகரிப்பதும் ஒரு அறிகுறியாகும்
சருமத்தில் கருப்பு திட்டுகள் காணப்படுவது டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறியாக கருதப்படுகின்றது.
30 வயதிலேயே மங்கலான பார்வை, கண் வலி, தெளிவற்ற பார்வை ஆகியவை இருந்தால் இவையும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் ஆகும்
வாய் துர்நாற்றம், அங்கங்கள் மந்தமான நிலையில் இருப்பது ஆகியவையும் இரத்த சர்க்கரை அதிகரிப்புக்கான அறிகுறிகளாக இருக்கின்றன
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.