யூரிக் அமிலம் அதிகரிப்பது இந்நாட்களில் பலருக்கு உள்ள பொதுவான ஒரு பிரச்சினையாக உள்ளது
யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தும் சில முக்கியமான உதவி குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்
யூரிக் அமிலம் அதிகம் உள்ள நோயாளிகள் சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்
மதுபானம் மற்றும் அதிக புரதச்சத்து உள்ள உணவுகள் ஆகியவற்றின் மூலமும் யூரிக் அமில அளவு அதிகரிக்கும்
யூரிக் அமில நோயாளிகள் வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்
சுரைக்காய் உடலில் உள்ள யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சுரைக்காய் சாறு குடிப்பது நோயாளிகளுக்கு உதவும்.
சரியான உணவு முறையுடன் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதும் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ரத்தத்தில் இருக்கும் அதிகமான யூரிக் அமிலத்தை உடலை விட்டு வெளியேற்ற உதவும்