இந்த ஆண்டு சனிப் பெயர்ச்சி நடைபெறவில்லை, ஆனால் அவரது ஒவ்வொரு இயக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்
அஸ்தனமத்தில் இருந்து மார்ச் மாதத்தில் உதயம் ஆன சனீஸ்வரர் ஜூன் 29ஆம் தேதி வக்கிர நிலைக்கு செல்கிறார்
ஜூன் 29ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் வரை வக்கிர நிலையில் நீடிக்கும் சனியினால் பலருக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்
சனீஸ்வரரை வீட்டில் வழிபடும் வழக்கம் இல்லை. ஆலயத்தில் அதிலும் சிவாலயத்தில் சென்று வழிபடுவது பலன் தரும்
சனீஸ்வரரின் கோவில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் அமைந்துள்ளது. அங்கு சென்று வழிபடுவது நலம் தரும்
சனிக்கிழமை மட்டுமல்ல, எந்த நாளில் வேண்டுமானாலும், நள தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் தர்ப்பாரண்யேசுவரரை வணங்கிய பிறகு சனீஸ்வரரை வணங்கி வருவது சனியினால் ஏற்படும் தோஷங்களை எல்லாம் தீர்க்கும்
சனிபகவானின் அருளாசி பெற்றால் பிரச்சனைகளை தீர்க்கும். வக்ர கதியில் இருக்கும் சனி பகவான், உங்கள் வாழ்க்கையில் வளங்களை கொடுப்பார்
ஆலயத்தில் இருக்கும் சிவன் மற்றும் பிற பிரதான தெய்வங்களை வழிபட்ட பிறகு, சனீஸ்வரரை வழிபட்டால் தான் முழுமையான பலன்கள் கிடைக்கும்
நவகிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரேயொரு கிரகம் சனீஸ்வரர் தான். ஈஸ்வரனை வணங்கிய பிறகே சனீஸ்வரரை வணங்குவது நல்லது
இந்தக் கட்டுரையில் இடம் பெற்ற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது