மூட்டு வலி, முழங்கால் வலியால் அவதியில் உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் சில சூப்பர் உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்க பெரும் அளவில் உதவும்
சால்மனில் ஆரோக்கியமான ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை எலும்புகளையும் மூட்டுகளையும் வலுவாக வைத்திருக்க உதவும்.
அதிக அளவு ஆந்தோசினனின்கள் உள்ள பெர்ரிகள் மூட்டு வலியை குறைப்பதிலும் எலும்பை ஆரோக்கியமாக வைப்பதிலும் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.
பாதாம் மற்றும் பிற உலர் பழங்களில் உள்ள மெக்னீசியம் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளுக்கு மிகச்சிறந்தவை.
எலும்புகளை வலுவாக வைக்க உதவும் அதிக புரதச்சத்தும் பிற ஊட்டச்சத்துகளும் சிவப்பு இறைச்சி மற்றும் முட்டைகளில் உள்ளன.
அவகாடோவில் அதிக அளவு வைட்டமின் ஈ மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு வலு அளிக்கும்.
ஒமேகா 3 மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள ஆளி விதைகள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவும்.
வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு பழத்தில் காயங்களை விரைவில் குணப்படுத்தும் கூறுகள் உள்ளன்ன. இவை எலும்புகளையும் வலுவாக வைக்கும்.