எடையை இழக்க நாம் பல விதங்களில் முயற்சி செய்கிறோம். ஆனால் பலருக்கு விரும்பிய பலன்கள் கிடைப்பதில்லை.
ஆயுர்வேதத்தில் எடையை குறைக்க பரிந்துரைக்கப்படும் மிக எளிய வழிகளை பற்றி இங்கே காணலாம்.
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து எடையை குறைக்க பெரிதும் உதவும்.
போதுமான தூக்கமின்மை மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும். நல்ல உறக்கமின்மை எடை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இரவில் லேசான உணவை உட்கொள்ளவும். தினமும் இரவு லேசான இரவு உணவை உட்கொள்வது செரிமான அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தாது. இதனால் உணவு செரிக்க போதுமான நேரம் கிடைக்கும்.
ஆரோக்கியமான மற்றும் சிறிய அளவிலான உணவை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு 3 முறை நாளின் முக்கிய உணவுகளை உட்கொள்வது உடலுக்கு ஜீரணிக்க நேரத்தை வழங்குகிறது.
சாப்பிட்ட பிறகு தினமும் குறைந்தது 10 முதல் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும்.
நாம் உட்கொள்ளும் உணவில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கசப்பு, காரம் என 6 சுவைகள் இருப்பது முக்கியம். இருப்பினும், அதிக சர்க்கரை மற்றும் உப்பு உட்கொள்வதை தவிர்க்கவும். இதனால் எடை அதிகரிக்கலாம்.
மஞ்சள், இஞ்சி, அஸ்வகந்தா, திரிபலா மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மூலிகைகள் எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். தினசரி உணவில் இவற்றை சேர்க்கவும்.