ஒற்றைத் தலைவலி (Migraine)என்பது சாதாரண தலைவலியை விட மோசமானது. ஒருவரின் வாழ்க்கையில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய் ஆகும்.
பாதாம், வாதுமை பருப்பு, சியா விதைகள் போன்ற ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு சிறந்த நிவாரணத்தை கொடுக்கும்
ஐஸ் கட்டி கொண்டு தலையை மசாஜ் செய்தால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
தலைவலி இருந்தால், ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் உட்கொள்ளுங்கள் இது உங்களுக்கு மிகவும் கை கொடுக்கும்.
இஞ்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஒற்றை தலைவலி போன்ற கடுமையான வலிக்கும் இஞ்சி உதவிகரமாக இருக்கும்.
மெக்னீஷியம் மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலம் நிறைந்த பூசணி விதைகள் ஒற்றைத் தலைவலிக்கு அருமருந்து.
குறைந்தது 10 நிமிடமாவது மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் தலைவலியில் இருந்து விடுபட்டு நிம்மதியாக உணர்வீர்கள்.
ஒமேகா 3 கொழுப்புடன் மீன் உணவு ஒற்றை தலைவலியைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும்.
கிரீன் டீயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் ஒன்றை தலைவலியை போக்கும்.
காபியில் உள்ள காஃபின் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.
டார்க் சாக்லேட்டிலும் காபின் நிறைந்துள்ளதால், ஒன்றை தலைவலிக்கு தீர்வைக் கொடுக்கும்.