UPI பின் இல்லாமல் பணப் பரிவர்த்தனை! எப்படி செய்வது
முதலில் Gpay செயலிக்குள் நுழைந்து முகப்பு பக்கத்தில் இருக்கும் UPI Lite ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பின்பு, உங்கள் வங்கி கணக்கு விவரங்களை உள்ளிட்டு, உங்கள் யுபிஐ லைட் வாலட்டில் பணத்தை சேர்க்கவும்.
பணம் செலுத்த யுபிஐ லைட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை உள்ளிட வேண்டும்.
பின்னர், Pay என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பணத்தை செலுத்தலாம்.
உங்கள் யுபிஐ லைட் வாலட்டில் நீங்கள் சேர்க்கக் கூடிய அதிகபட்சத் தொகை 2000 ரூபாயாகும்.
Paytm மற்றும் PhonePe போன்ற பிற தளங்கள் ஏற்கனவே இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
யுபிஐ லைட்டை பயன்படுத்தி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும்