எலும்பு தேய்மானம்

Malathi Tamilselvan
Nov 07,2023
';

எலும்பு ஆரோக்கியம்

வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பது அவசியம். ஏனெனில் 30 வயதுக்கு பிறகு எலும்பு வளர்ச்சி நின்றுவிடும்

';

தேய்மானமடையும் எலும்பு

எலும்புகள் மீண்டும் கட்டமைக்கப்பட்டாலும் தொடர்ந்து தேய்மானம் அடைகின்றன. ஆரோக்கியமாக இருக்க இந்த தவறுகளை செய்யாமல் பாதுகாக்க வேண்டும்

';

உப்பு

உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொண்டால் சிறுநீரின் மூலம் கால்சியம் அதிக அளவில் வெளியேறும். இது எலும்புகளுக்கு நல்லதல்ல. எனவே குறைந்த உப்புடன் சமச்சீரான உணவை உட்கொள்வது நல்லது

';

காஃபின் உட்கொள்ளல்

அதிகப்படியான காஃபின் உட்கொள்வது கால்சியம் உடலில் சேர்வதைத் தடுக்கும். எனவே காபி குடிப்பதையும் கட்டுக்குள் வைக்கவும்

';

வைட்டமின் பற்றாக்குறை

கால்சியம் உறிஞ்சுதலுக்கு வைட்டமின் டி முக்கியமானது. போதுமான சூரிய ஒளியைப் பெறாமல் இருப்பது எலும்புகளை பலவீனப்படுத்தும். அதோடு உணவில் வைட்டமின் டி அதிகம் சேர்க்கவும்

';

வைட்டமின் பற்றாக்குறை

எலும்புகளை பலவீனமடையச் செய்வது போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காதது தான்

';

மது அருந்துவது

பொதுவாகவே உடலுக்கு தீங்கு செய்யும் மதுவை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் எலும்புகள் மேலும் பலவீனமடையும். மது அருந்துவதை கட்டுப்படுத்தவும்.

';

பாஸ்பரஸ்

எலும்பு ஆரோக்கியத்திற்கு பாஸ்பரஸ் அவசியம் என்றாலும், அது அதிகப்படியான கால்சியம் உறிஞ்சுதலைத் தடுக்கலாம். பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளை உண்பதை மட்டுப்படுத்தவும்

';

வாழ்க்கை முறை

உட்கார்ந்தே வேலை செய்யும் வாழ்க்கை முறை எலும்பு தேய்மானத்தை அதிகரிக்கும். எனவே நடைபயிற்சி மற்றும் வலிமை பயிற்சி என உடல் செயல்பாடுகளை அதிகரிக்கவும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story