கடுமையான உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையவில்லை என்றால் அதற்கு தவறான உணவு பழக்கமே காரணம்.
உடல் பருமன் குறைய சில வெள்ளை உணவுகளை ஒதுக்கி வைக்க வேண்டியது அவசியம்.
மைதாவால் செய்யப்பட்ட உணவுகள், பிரட்டுகள் நார்ச்சத்து புரதம் எதுவுமே இல்லாதவை.
அரிசியில் குறைந்த அளவிலான நார்ச்சத்தும், அதிக மாவு சத்தும் உள்ளது. இதற்கு பதிலாக சிவப்பு அரிசி சாப்பிடலாம்.
உடல் பருமன் குறைய வேண்டும் என்றால் சர்க்கரையை விலக்காமல் சாத்தியமில்லை. அதற்கு பதிலாக வெல்லம் எடுத்துக் கொள்ளலாம்.
வெள்ளை பாஸ்தா கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்தது. அதற்கு பதிலாக கோதுமை பாஸ்தா எடுத்துக் கொள்ளலாம்.
உடலில் எலக்ட்ரோலைட் அளவு சீராக இருக்க உப்பு தேவை. வெள்ளை உப்பிற்கு பதிலாக இந்துப்பு பயன்படுத்தலாம்.
ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த மயோனைஸ்-ஐ ஒதுக்கி வைப்பது சிறந்தது.
சர்க்கரை, கொழுப்பு அதிகம் உள்ள கன்டன்ஸ்டு மில்க் எடுத்துக் கொள்வதற்கு பதிலாக தேங்காய் பால் சோயா பால் பாதாம் பால் எடுத்துக் கொள்ளலாம்.