விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடியஉணவுகளை சாப்பிடுவதால், ஆண்கள் பாலியல் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்
விந்தணுக்களுக்கு ஆக்ஸிஜனின் ஒட்டத்தை அதிகரிக்க ஆலிவ் எண்ணெய் உதவும். இது ஆரோக்கியமான விந்தணுக்களை உருவாக்கவும் உதவும்.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சூப்பர் ஃபுட் ஆன முட்டைகளில் வைட்டமின் ஈ, புரதம் நிறைந்துள்ளது. இது விந்தணுக்களின் இயக்கத்துக்கு உதவுகிறது.
பூண்டு விந்தணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் அலிசின் விந்தணுக்களின் சரியான பகுதிக்கு இரத்த ஓட்டத்தை தூண்ட உதவுகிறது.
வாழைப்பழத்தில் உள்ள ப்ரோம்லைன் என்னும் அரிய நொதி உள்ளது. இது விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதன் செயல்பாட்டையும் அதிகரிக்க உதவுகிறது.
பூசணி விதைகளில் அதிக அளவு துத்தநாகம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தி, கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
கீரையில் இருக்கும் ஃபோலிக் அமிலம் விந்தணுக்களின் வளர்ச்சிக்கு அவசியமானது. விந்தணுக்கள் வீரியத்தையும் ஊக்குவிக்கிறது.
பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் விந்தணுக்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாத்து விந்தணுகள் வீரியமாக கருமுட்டையை அடைய வலுவை கொடுக்கிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மாதுளை பழம் மற்றும் சாறு விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது.
தரமான விந்தணுக்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. சால்மன், நெத்திலி உள்ளிட்ட பல வகையான கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்ளலாம்.