வேகமாக பரவும் "மெட்ராஸ் ஐ" - குணப்படுத்த சில வீட்டு வைத்தியம்
குழந்தைகள் இந்தத் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்
கனமழையால் காற்றில் ஈரப்பதம் பரவி மாசுபடுவதால் கண்களில் இந்த தொற்று அதிகரித்து வருகிறது.
பருவமழை காரணமாக இளஞ்சிவப்பு கண் அல்லது கான்ஜுன்க்டிவிடிஸ் பிரச்சனை பலருக்கு காணப்படுகிறது.
கண் எரிச்சல், கண் வீக்கம், உறுத்தல், கண்கள் சிவந்து காணப்படுதல், கண்களில் அடிக்கடி நீர் சுரத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
ஒரு கண்ணில் தொற்று ஏற்பட்டால் அடுத்த கண்ணுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
1 கிளாஸ் தண்ணீரில் 2 ஸ்பூன் தேன் கலந்து கண்களைக் கழுவினால் இந்த நோய்த்தொற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கண்களில் 2-2 சொட்டு ரோஸ் வாட்டர் போடவும். இது கண்களில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலில் இருந்தும் நிவாரணம் தரும்.
இரவு படுக்கும் முன், சிறு துண்டுகளாக வெட்டிய உருளைக்கிழங்கை 10-15 நிமிடங்கள் கண்கள் மீது வைத்தால் இது கண்களின் வீக்கம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
துளசி இலைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் இந்த நீரில் கண்களை கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால் கண்களுக்கு பலன் கிடைக்கும்.
வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை போட்டு நன்றாக கலந்துக்கொண்டு, பஞ்சு நனைத்து கண்கள் மீது துடைத்தால், கண் காய்ச்சலைத் தடுக்கவும் உதவும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. Zee Tamil News இதை உறுதிப்படுத்தவில்லை. எந்தவொரு தகவலையும் செயல்படுத்துவதற்கு முன், சம்பந்தப்பட்ட நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.