40 வயதை எட்டும்போது உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்துக் கொள்ளுங்கள். நரை முடி, தளர்ந்த சருமம் மற்றும் முடி உதிர்தல் என பல புதிய சவால்களுடன் முதுமை நம்மிடம் வருகிறது. வெளிப்புற மாற்றங்களை கவனிக்கவும் சமாளிக்கவும் எளிது. ஆனால் கண்ணுக்கு தெரியாமல் உடலுக்குள் நிகழும் மாற்றங்களை எப்படி சமாளிப்பது?
அதிலும் குறிப்பாக, பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தைக் குறித்து 40 வயதுகளுக்கு மேல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆண்களை விட பெண்களுக்கு எலும்புகள் விரைவில் தேய்மானம் ஆகிறது
நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதால், ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு 40 வயது எட்டுபவர்கள் அவசியம் வந்தாக வேண்டும்
வயதாகும்போது, அதிலும் நடுத்தர வயதை அடையும்போது நமது உடலின் உள் உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் முக்கியமானது எலும்பு அடர்த்தி குறைவது மற்றும் எலும்புகள் வலுவிழப்பது. இது உடலை பலவீனமாக்குகிறது.
வயதானாலும், நமது உள் உறுப்புகள் தேய்மானம் அடையாமல் இருக்கவும் பலவீனம் அடையாமல் இருக்கவும் நமது எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்துக் கொள்வது அவசியம்.
வலுவான எலும்புகளுக்கு கால்சியம் அடித்தளம் அமைக்கிறது. உணவில் போதுமான அளவு கால்சியம் இருப்பதை உறுதி செய்வது எலும்பு அடர்த்தியை சீராக வைக்க உதவுகிறது.
மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி, தினமும் சராசரியாக 1,000 மி.கி கால்சியம் ஒருவருக்கு அவசியம். எனவே, கால்சியம் நிறைந்த உணவுகளையே உண்ணுங்கள்.
வைட்டமின் டியின் சிறந்த மூலமாக சூரிய ஒளி இருக்கிறது. இது சுலபமாக நமக்குக் கிடைக்கிறாது. எனவே சூரிய ஒளியைப் பெறுவதில் கவனமாக இருக்க வேண்டும்
குளிர்காலத்தில் சூரிய ஒளியை பெறுவது கடினம் என்பதால், வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். கால்சியம் நிறைந்த உணவுகளை உண்டாலும், உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இருக்கும்போது மட்டுமே உடலால் கால்சியத்தை கிரகிக்க முடியும்.
பிறர் கிண்டல் செய்வார்கள் என்ற தயக்கமே இல்லாமல் உங்களுக்கு பிடித்த உடல் செயல்பாடுகளை தொடருங்கள். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது சுறுசுறுபான உற்சாகமூட்டும் உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதும், வழக்கமான வேலைகளை தொடர்ந்து செய்துக் கொண்டு இருப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம். நடைபயிற்சி மட்டுமல்ல, ஓட்டம், நடனம் என உடலை இயக்கும் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் வயதாவதால் அவற்றை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை