கோடையில் வரும் இந்தப் பிரச்சனைக்கு சூப்பரான தீர்வு

';

கோடைக்காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் சிலருக்கு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும்.

';

இப்பிரச்சனை சரியாக வேண்டும் என்றால் ஒரு கைப்பிடி பாலக் கீரையை நன்றாகச் சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.

';

ஒரு பாத்திரத்தில் 500 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள பாலக் கீரை, 10 கிராம் சீரகம், சிறிதளவு மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.

';

நன்கு கொதித்து அதை 150 மில்லி அளவாகச் சுண்டச் செய்து இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும். தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் இதைத் தயார் செய்து குடித்து வரவும்.

';

இந்தக் கசாயம் சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் வெளியேறும் பிரச்சினையைத் தீர்த்து சிறுநீர்ப்பையை வலுப்படுத்த உதவும்.

';

மேலும், இரவு படுக்கப்போகும் முன் இரண்டு வெற்றிலை, இரண்டு மிளகு, ஐந்து உலர் திராட்சை ஆகிய மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

';

வெயில் கடுமையாக இருக்கும் நேரத்தில் அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வந்தால் சொட்டு சிறுநீர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

';

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் காய்ந்த மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்துவதும் சிறந்தது

';

VIEW ALL

Read Next Story