இஞ்ச்ரோல் என்ற பயோ ஆக்டிவ் பொருள் நிறைந்த இஞ்சி ஏராளமான நன்மைகளை கொடுக்கிறது. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
இஞ்சியை அதிகமாக உட்கொள்வதால் இது கல்லீரலில் அதிக பித்த சுரப்பியை தூண்டி பித்தப்பை கற்கள் ஏற்பட காரணமாகிறது.
இஞ்சி செரிமானத்தை வலுப்படுத்தும் என்றாலும், அளவிற்கு அதிகமானால் வயிற்று போக்கை ஏற்படுத்தலாம்.
கர்ப்ப காலத்தில் அதிக அளவில் இஞ்சியை உட்கொள்வதால், கருச்சிதைவு அல்லது குறைமாத பிரசவ பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஹீமோபிலியா போன்ற ரத்த கோளாறு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உணவில் இருந்து கட்டாயமாக இஞ்சியை தவிர்க்க வேண்டும்.
ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற அழற்சி பிரச்சனை உள்ளவர்களுக்கு, அதிகமாக இஞ்சி உட்கொள்வதால் நெஞ்செரிச்சல் ஏற்படும்.
இஞ்சி அலர்ஜி இருந்தால், அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது சருமத்தில் பாதிப்பு உண்டாகலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.