ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான பாதாம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அளவிற்கு அதிகமான பாதாம் பாதிப்பை ஏற்படுத்தும்.
வைட்டமின் ஈ நிறைந்த பாதாம் கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் அத்யாவசியமானது என்றாலும் அளவிற்கு அதிகமானால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
அளவிற்கு அதிகமாக பாதாம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
அளவிற்கு அதிகமான தான் உள்ள ஆக்ஸிலேட் அளவு அதிகரித்து சிறுநீரக கல் உருவாகும் அபாயம் உள்ளது.
அதிகமான பாதாம் நட்ஸ் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். இதனால் முகத்தில் வீக்கம், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படலாம்
அதிக அளவில் பாதாம் சாப்பிடுவதால் பிற ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஏற்படலாம். அதிக நார்ச்சத்து உள்ளதால் உடல் மெக்னீசியம் இரும்புச்சத்து கால்சியம் ஆகியவற்றை கிரகித்துக் கொள்ளாமல் போகலாம்
ஒரு நாளைக்கு ஒருவருக்கு 50 கிராம் பாதாம் மட்டுமே தேவை. அதைவிட அதிகமாக சாப்பிடுவது கூடாது.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது