பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும், பாட்டில், கேன், டின்களில் அடைக்கப்பட்டுள்ள பானத்தை குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இவை ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு.
கார்பனேட்டட் பானங்களில் சத்துக்கள் என்பது மருந்துக்கும் கூட இல்லை. இதில் இருப்பது கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சர்க்கரை மட்டுமே.
கார்பனேட்டட் பானங்களில் சோடியம் பென்சோயிட் என்னும் இரசாயனம் உள்ளது. இது குழந்தைகளின் நினைவாற்றலை பாதிக்கிறது.
நினைவுத்திறன் குறைவதோடு, யோசிக்காமல் பேசுதல் அல்லது செயல்படுதல், கவனச்சிதறல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.
கார்பனேட்டட் பானங்கள் உடலில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சி எலும்பு மெலிதல் என்னும் ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் மூட்டு வலிகள் ஏற்பட காரணமாகிறது.
கார்பனேடட் பானங்களில் சர்க்கரை மிக அதிக அளவில் இருப்பதால் அவை உடல் பருமன், டைப் 2 வகை நீரிழிவு, மெட்டாபாலிஸம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட காரணமாகின்றன.
கார்பனேடட் பானங்கள், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற அபாயத்தை அதிகரிக்கின்றன.
கேஃபைன் அதிகம் இருப்பதால், தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுவதோடு, இதயத் துடிப்பும் அதிகரிக்கிறது.