உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
காலை உணவில் புரோட்டீன் நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைக்க காலை உணவில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பயத்தம்பருப்பில் பல வகையான புரதங்கள் நிறைந்துள்ளன. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவுகிறது.
ஓட்ஸில் புரதம் நிறைந்துள்ளது. ஓட்ஸ் எளிதில் ஜீரணமாகும். இதை சாப்பிட்ட பிறகு மீண்டும் மீண்டும் பசி எடுப்பதில்லை.
அவல் சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டிலும் சிறந்தது. ஏனெனில் இதில் குறைந்த கலோரி உணவான ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உள்ளது.
ரவை மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படும் உப்புமா ஒரு சிறந்த காலை உணவாக கருதப்படுகின்றது. இது எளிதில் ஜீரணமாகும்.
முளைத்த பயறுகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் இவற்றை உட்கொள்வதால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.