நீதியின் கடவுள் என அழைக்கப்படும் சனி பகவான் தற்போது சதய நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அக்டோபர் 17ம் தேதி வரை இந்த நக்ஷத்திரத்தில் சனியின் சஞ்சாரம் இருக்கப் போகிறது.
சனி பகவான் சதயத்தில் உள்ள நிலையில் உருவாகும் சனி ராகு கூட்டணியினால், சில ராசிகளுக்கு பாதகப் பலன்கள் ஏற்படும்.
கடக ராசிகளுக்கு உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கும். அக்டோபர் 17ம் தேதி வரை எந்தவிதமான முதலீடும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலைமை பாதிப்பிற்கு உள்ளாகும்
கன்னி ராசிகளுக்கு மனக் குழப்பமும், வாழ்வில் ஏமாற்றமும் உண்டாகும். உழைத்தாலும் வெற்றி கிடைக்காது. வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். உங்கள் நிதி நிலை பாதிக்கும்.
விருச்சிக ராசிகளுக்கு சனியின் தாக்கத்தால் ரத்த சம்பந்தமான நோய்களை சந்திக்க நேரிடும். அரசாங்க அதிகாரியுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். காதல் உறவுகளில் கவனமாக நடப்பது நல்லது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.
கும்ப ராசிகளுக்கு வாழ்க்கைத் துணையுடன் ஏதாவது ஒரு விஷயத்துக்காக தகராறு ஏற்படலாம். இதனால் குடும்ப அமைதி கெடும். நிதி நிலைமைஅவ்வளவு சாதகமாக இருக்காது.
மீன ராசிகளுக்கு உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பாதங்கள் மற்றும் முழங்கால்கள் தொடர்பான பிரச்சனை இருக்கலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். இதனால் நிதி நிலை பாதிக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.