பல், எலும்பு & செரிமான ஆரோக்கியத்திற்கு நம்பர் ஒன் சூப்பர்ஃபுட் ராகி!

Malathi Tamilselvan
Jan 01,2024
';

ஊட்டச்சத்துக்கள்

சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம் ஆகும். 100 கிராம் ராகியில் 320 கலோரிகள், புரதச்சத்து 7 கிராம் , கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம், நார்ச்சத்து 11 கிராம், கால்சியம், 364 மி.கி, இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது

';

நார்ச்சத்து

செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ராகியில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும், ஜீரணத்துக்கும் உதவுகிறது.

';

உடல் எடை

ராகி, உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உல்ள புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது. உடல் எடை குறைப்புக்கு அவசியமான ஒன்று

';

எலும்பு அடர்த்தி

ராகியை அவ்வப்ப்போது உண்பது, எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது. ராகியில் உள்ள கால்சியம் எலும்பை உறுதிப்படுத்துகிறது. இதனால் எலும்பு முறிவுகள் விரைவில் சீராகிறது.

';

கால்சியம்

கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவு என்றால் ராகியைச் சொல்லலாம். கர்ப்பிணிக்கு தேவையான கால்சியம் மற்றும் குழந்தை பிறப்புக்குப் பிறகு, தாய்ப்பால் சுரக்கவும், தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் ராகி உதவுகிறது.

';

ராகி மாவு

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ராகி மாவு குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பல்வேறு உணவுகளில் சேர்க்கப்பட்டு, குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கிறது.

';

அனீமியா

ராகியில் உள்ள இரும்புச்சத்தின் மூலம் ரத்த சிவப்பணுக்களை உருவாக்கி அனீமியாவை எதிர்த்து போராடுகிறது.

';

VIEW ALL

Read Next Story