நம் உடலின் மிக முக்கிய உறுப்பான சிறுநீரகம் எனப்படும் கிட்னி உடலின் கழிவுகளை வெளியேற்றுதல், ஹார்மோன்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கிய வேலைகளை செய்கிறது.
பழுப்பு அரிசி ஆரோக்கியமான உணவு என்றாலும் அதிக அளவு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளதால் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
பால் பொருட்களில் அதிக பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதம் உள்ளது. இவை அளவுக்கு அதிகமாவது சிறுநீரக நோயாளிகளுக்கு நல்லதல்ல.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அதிகம் இருப்பதாலும், அதில் உப்பு மற்றும் பிரசர்வேட்டிவ் சேர்க்கப்படுவதாலும் சிறுநீரக நோயாளிகள் இதனை தவிர்க்க வேண்டும்
முழு கோதுமை சத்தான உணவு தான் என்றாலும், இதில் அதிக நார்ச்சத்து இருப்பதன் காரணமாக சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.
சிறுநீரக நோயாளிகளுக்கு பொட்டாசியம் நிறைந்த உணவு நல்லதல்ல. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவு இருப்பதால் அதனை தவிர்க்க வேண்டும்
சோடா பானங்களில் கலோரி, சர்க்கரை மிக அதிகம். அதோடு அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. பாஸ்பரஸும் சேர்க்கப்படுகிறது. எனவே இதனை தவிர்க்க வேண்டும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.