பொட்டாசியத்தின் மிக முக்கியமான செயல்பாடு இதயத் துடிப்புக்கு உதவுவதாகும். பொட்டாசியம் இதய தசைகளை நிலாக்ஸ் செய்து தளர்த்தவும் உதவுகிறது.
பொட்டாசியம் சத்தும், நமது இதய நரம்புகளின் செயல்பாட்டை சரியாக பராமரிப்பதோடு, இதய துடிப்பை சீராக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு அபாயம் குறையும்.
உடலில் பொட்டாசியம் சத்து குறைபாடு அதிகமாக இருந்தால், அந்த நிலை மருத்துவத்தில் ஹைபோகாலேமியா (Hypokalemia) என அழைக்கப்படுகிறது.
ஒரு நபரின் உடலில் பொட்டாசியத்தின் அளவு லிட்டருக்கு 3.6 மில்லிமோல்களுக்குக் கீழே குறையும் போது பொட்டாசியம் சத்து குறைபாடு ஏற்படுகிறது.
சுமார் 240 மிலி இளநீரில் 600 மி.கி பொட்டாசியம் உள்ளது. மேலும், இதில் மெக்னீசியம், கால்சியம், சோடியம் மற்றும் மாங்கனீசு நிறைந்துள்ளது.
வாழைப்பழம், ஆரஞ்சு, முலாம்பழம், திராட்சை பழங்கள், உலர் திராட்டை, பேரீச்சம் பழம் இவற்றில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது.
பிரோக்கோலி, கீரை, பச்சை இலை காய்கறிகள், பட்டாணி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் பொட்டாசியம் அதிகளவு காணப்படுகிறது.
மீன் உணவுகளில், டூனா மீன், சால்மன் போன்ற மீன் வகைகளிலும் பொட்டாஷியம் அதிக அளவில் காணப்படுகிறது.
பீன்ஸ்சில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதோடு, புரதம், நார்ச்சத்து போன்றவையும் நிறைந்துள்ளது.